உதயநிதி ஸ்டாலினின் மாறுபட்ட நடிப்பில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’மாமன்னன்’ . ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகரும் , இயக்குனரும் , இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கூறியதாவது:
சினிமாவை விட்டு செல்லும் உதயநிதியை நான் வாழ்த்தி அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார். இந்த விழாவுக்கு வந்த பலர் உதயநிதி சினிமாவை விட்டு செல்லக்கூடாது என்று பேசினர். ஆனால் உதயநிதி அரசியல் காரணங்களுக்காக சினிமாவை விட்டு செல்வதால் அவரை நான் மனதார வாழ்த்தி அனுப்புகிறேன் என்று விஜய் ஆண்டனி கூறியுள்ளார் .
ஒரு பெரிய அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவரிடம் எந்த விதமான ஈகோவையும் நான் பார்த்ததில்லை உதயநிதி பழகுவதற்கு மிகவும் எளிமையானவர் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் மாரி செல்வராஜ் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் ஒவ்வொரு படத்தையும் அவர் வித்தியாசமான கோணத்தில் எடுத்து வருகிறார் என்றும் அவரது பணி மென்மேலும் தொடரட்டும் என்று வாழ்த்து தெரிவித்தார்.