ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து புவிசுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக உயர்த்தப் பட்டு நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தது.பின்னர் சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்டது. தொடர்ந்து,இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் சந்திராயன் 3 எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களையும் வெளியிட்டது.
அதையடுத்து இன்று சரியாக மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும், இந்த நிகழ்வை மாலை 5.20 முதல் இஸ்ரோ நேரலை செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில்,உலகமே உற்று நோக்கியுள்ள நிலவில் தடம் பதிக்கவுள்ள விக்ரம் லேண்டருக்கு நடிகர் மாதவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,சந்திரயான்-3 முழு வெற்றி பெறும் அற்புதமான வெற்றியை இஸ்ரோவுக்கும், நம்பி நாராயணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.