”வாய்ப்புகளை தவறிவிட்ட காங்கிரஸ்” – லண்டனில் விளாசிய கேசிஆர் மகள்!!

மக்களுக்கு சேவை செய்ய காங்கிரஸ் கட்சிக்கு பலமுறை வாய்ப்புகள் கிடைத்தும் அதைச் செய்யத் தவறிவிட்டார்கள் என கேசிஆர்-ன் மகள் கே.கவிதா(k-kavitha )குற்றஞ்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.இதனை முன்னிட்டு 3 காட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தெலங்கானா முதல்வரும், பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதா,ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனை ஏற்று லண்டன் சென்றார்.அப்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேசிய அவர், ” தெலுங்கானா வளர்ச்சி மாதிரி என்பது முக்கியமான தேர்தல் திட்டமாகும். அதில் பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சி, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வரும். காங்கிரஸுக்கு மக்களுக்குச் சேவை செய்வதற்கான வாய்ப்புகள், மீண்டும் மீண்டும் கிடைத்தன.

ஆனால் அவர்கள் அதைச் செய்யத் தவறிவிட்டார்கள். தெலங்கானா மக்களுக்கு குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளைக்கூட அவர்கள் செய்து கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

Total
0
Shares
Related Posts