அமெரிக்காவில் அண்மைக் காலமாக முக்கிய மாகாணங்களின் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. மேலும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் காரணமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்த நிலையில் துப்பாக்கி பயன்படுத்துபவர்களின் வயது வரம்பு அதிகரிப்பு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அரசாணை அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
வெஸ்டாவியா ஹில்ஸ் நகரில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் எபிஸ்கோபல் தேவாலயத்தில் நேற்றிரவு உணவு விருந்து நடைபெற்ற போது, உள்ளே புகுந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இந்த சம்பவத்தில் 3 பேர் காயம் அடைந்த நிலையில், இருவர் உயிரிழந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைப் பிடித்து தாக்குதலுக்குக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்