இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, தனது வான்வழித் தடத்தைத் ஈரான் தற்காலிகமாக மூடியுள்ளது.
ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா கடந்த ஜூலை மாதம் 31 தேதி டெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டதற்கு இஸ்ரேல் தான் காரணம் எனக் கூறிய ஈரான் . இதற்காக இஸ்ரேலை நிச்சயம் பழிவாங்குவோம் என அறிவித்திருந்தது .
இந்நிலையில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாஹ் உள்ளிட்டோரின் உயிரிழப்புக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது .
Also Read : இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல்..!!
இதையடுத்து ஈரான் நடத்திய இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ள நிலையில் இரு நாட்டு எல்லைகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது வான்வழித் தடத்தைத் ஈரான் தற்காலிகமாக மூடியுள்ளது. நாளை காலை வரை ஈரானில் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாகவும் ஈரான் அரசு அறிவித்துள்ளது.