அம்பேத்கரை மத்திய அமைச்சர் அமித்ஷா அவமதித்ததாகக் கூறி தமிழ்நாடு முழுவதும். திமுக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய அரசியலைமப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை, புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, சென்னை, புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் அம்பேத்கரின் புகைப்படத்தை கையில் ஏந்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள அம்பேத்கர் பாலம் அருகில் சென்னை தென்மேற்கு மாவட்ட செயலாளர் மயிலை வேலு MLA தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி சார்பில் தமிழ்நாடு எம்.பிக்கள், அம்பேத்கருக்கு அவமதிப்பளிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் “அமித்ஷா பதவி விலக வேண்டும்” என தமிழில் முழக்கமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.