ITamilTv

“மனிதம் செத்துவிட்டது”.. மீம்ஸ்களால் வறுத்தெடுத்த நெட்டிசன்கள் – உருக்கமாக பதிவிட்ட Cook with Comali வெங்கடேஷ் பட்!

Spread the love

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சி என்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். குழந்தை முதல் வயதானவர்கள் வரை மன அழுத்தத்திற்கு மருந்தாக மாறியிருக்கிறது `குக்-வித் கோமாளி”. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களின் ஒருவரான வெங்கடேஸ் பட் போட்ட அந்த உருக்கமான பதிவுதான் மிகவும் வைரலாகி இருக்கிறது. அப்படி என்ன பதிவு அது.. எதற்காக பதிவு சேய்தார் என்பதை பார்க்கலாம்..

திரையுலகத்தி பிரபலமடைந்தாலும் புகழ், சிவாங்கி உள்ளிட்டோர் நிகச்சியின் மூன்றாவது சீசனிலும் கலந்துகொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று சமீபத்தில் வெளியானது. அந்த ப்ரோமோவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்டுவிட்டதாக ஒருவர் கூறியதாக புகழ் தெரிவித்தார்.

அதேபோல் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட், “குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து ஒரு தம்பதிக்கு குழந்தை பிறந்தது” என்றார்.

வெங்கடேஷ் பட் கூறியது நெட்டிசன்களால் ட்ரோல் மெட்டீரியலாக ஆக்கப்பட்டது. பலரும் , குக் வித் கோமாளி நிகழ்ச்சியை வைத்தும், வெஙக்டேஷ் பட்டையும் வைத்து மீம்ஸ்களையும் உருவாக்கினர்.

அதேசமயம் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்தும் சில பதிவுகள் உலா வந்தனர். இந்தச் சூழலில் வெங்கடேஷ் பட் தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இரண்டு நாள்கள் நிஜமாகவே உடைந்து போனேன்.கவலையாக இருந்தது. என்னை ட்ரோல் செய்ததால் கவலைப்படவில்லை. மனிதநேயம் செத்துவிட்டதாக மீம்ஸ்கள் என்னை உணரவைத்தது. எது வேண்டுமானாலும் சாகலாம் ஆனால் மனிதாபிமானம் இல்லை. கடவுள் இருக்கார்ர குமாரு.

நல்லவர்கள் இன்னும் இவ்வுலகில் இருக்கிறார்கள்.கீழே உள்ள படம் இப்போது தேசிய அளவில் ட்ரெண்டாகிவருகிறது.அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி…

குழந்தை செல்வம் உள்ளவர்களுக்கே தெரியும் அது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று.குழந்தை இல்லாதவர்களை யோசித்து பாருங்கள். என்னை கிண்டல் செய்கிறேன் என நினைத்து உங்களை நீங்களே தரம் தாழ்த்துக்கொள்ளாதீர்கள் என மீம்ஸ் க்ரியேட்டர்ஸிடம் கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கும் மனம் முடிந்து 7 ஆண்டுகள் கழித்து கிடைத்த செல்வம் என் குழந்தை.ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமானதை நான் உணர்ந்தவன்” என குறிப்பிட்டுள்ளார்.


Spread the love
Exit mobile version