பிக் பாஸ் 7 வீட்டில் நடந்த சம்பவத்தால் கோபம் அடைந்த கூல் சுரேஷ் வீட்டை விட்டு கிளம்புவதாக கூறி பெட்டியை தூக்கிக் கொண்டு செல்லும் ப்ரொமோ வீடியோ வெளியாகி உள்ளது.
பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். முதல் வாரத்தில் நடிகை அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். பவா செல்லதுரையும் தானாகவே வெளியேறினார்.
இதை தொடர்ந்து மூன்றாவது போட்டியாளராக விஜய் வர்மா வெளியேற்றப்பட்ட நிலையில், கடந்த வாரம் யுகேந்திரன் மற்றும் வினுஷா ஆகிய இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் அர்ச்சனா, கானா பாலா, தினேஷ் கோபால சுவாமி, அன்ன பாரதி, பிராவோ ஆகிய 5 பேர் பிக்பாஸ் வீட்டின் உள்ளே வயல் கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்துள்ளனர்.
வைல்டு கார்டு போட்டியாளர்களாக களமிறங்கிய முதல் நாளே பிக் பாஸ் வீட்டாருக்கும், ஸ்மால் பாஸ் வீட்டாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினையும் இரண்டாகவே இருந்து வருகின்றது.
இந்த நிலையில் கூல் சுரேஷ் வீட்டை விட்டு கிளம்புவதாக கூறி பெட்டியை தூக்கிக் கொண்டு செல்லும் ப்ரொமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அதன புரமோவில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரின் தலையிலும் மணி அடங்கிய ஹெட்கியரை கட்டி விட்டிருக்கிறார்கள். ஹெட்கியரில் இருக்கும் மணி ஒலிக்காமல் இருப்பது தான் டாஸ்க் என ரவீணா விதிமுறைகளை கூறுகிறார்.
தலைக்கு மேல் இருக்கும் ஹெட்கியரில் இருக்கும் மணி ஒலிக்க கூடாதே என ஹவுஸ்மேட்ஸ் மெதுவாக நடந்து கொண்டிருக்க, தன் அருகே வரப் பார்த்த கூல் சுரேஷிடம், நான் நேர்மையாக ஆடிக்கிட்டு இருக்கிறேன். அமைதியாக வேறு எங்காவது போய் விளையாடு என்றார் பிரதீப் ஆண்டனி.
இதையடுத்து யார், யார் அவுட்டுனு சொல்லுங்க என பிக் பாஸ் கேட்டதும், ரவீணா என மாயா சொல்கிறார். பிரதீப் என கூல் சுரேஷ் தெரிவித்தார். இதனால் பிரதீப் கடுப்பாகி கமெண்ட் அடிக்க, டேய் என்னடானு கேட்டார் கூல் சுரேஷ்.
நான் அப்படித் தான் பேசுவேன் என பிரதீப் கூறியதை கேட்டு, நான் இன்றுடன் இந்த பிக் பாஸை விட்டு போயிடுவேன் என பெட்டி, படுக்கையுடன் கிளம்பிவிட்டார் கூல் சுரேஷ். அதை பார்த்த சக போட்டியாளர்கள் அதிர்ச்சியாகி அவரை தடுத்து நிறுத்த முயன்றதுடன் ப்ரொமோ வீடியோ முடிந்துவிட்டது.