நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து அர்ஜூன் இண்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:-
நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். சோதனை முடிவில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நான் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை எடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நான் நலமாக உள்ளேன். தயவுசெய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். ராம பக்த ஹனுமான் கி, ஜி! என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.