Site icon ITamilTv

பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கொரோனா தொற்று..!

Spread the love

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பி.சி.சி.ஐ. தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கங்குலி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவில் கண்டறியப்பட்டு உலக நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதோடு கொரோனா தடுப்பூசிகளும் முழு வீச்சில் செலுத்தப்பட்டு வருகிறது.

கண்ணுக்குத் தெரியாமல் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அதிக உயிரிழப்பை உருவாக்கிய கொரோனா தொற்று குறைவடைந்த நிலையில், டெல்டா, டெல்டா பிளஸ் என அடுத்தடுத்து உருமாற்றங்கள் அடைந்து பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டு சீனா, உள்ளிட்ட 100 ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள உருமாறிய ஒமைக்ரன் வைரஸ் தொற்று இந்தியாவிலும் பல மாநிலங்களில் பரவி உள்ளது. இந்த வைரஸ் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா 2 வது அலை கட்டுப்படுத்தப்பட்டாலும் ஆங்காங்கே நோயின் தாக்கம் கண்டறியப்படுகிறது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள், சாமானியர் என பாரபட்சமின்றி கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பி.சி.சி.ஐ. தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Spread the love
Exit mobile version