சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா உலக நாடுகளில் பரவி பெரிதும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து பதிப்புக்களை ஏற்படுத்தியது.
இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து கொரோனா படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் கொரோனா தொற்றுப் பரவத் தொடக்கி உள்ளது. இந்த நிலையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ள நிலையில், கவனம் தேவை என கூறியுள்ளார். மேலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த சில வாரங்கள் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் அவசியம் மற்றும் முக்கியம் என தெரிவித்துள்ளார். ஏப்ரல் 15-ஆம் தேதி நிலவரப்படி 22-ஆக இருந்த பாதிப்பு, தற்போது 100-ஆக பதிவாகி வருகிறது.
நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் மற்றும் வார இறுதிகளில் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.