ரவுடி கருக்கா வினோத்தை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு..!!

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டை வீசிய ரவுடி கருக்கா வினோத்தை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை, கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகை மீது இருசக்கர வாகனத்தில் வந்த பிரபல ரவுடியான கருக்கா வினோத் பெட்ரோல் குண்டை வீசியுள்ளார்.

இதையடுத்து ஆளுநர் மாளிகை முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவலர்கள் பெட்ரோல் குண்டை வீசிய ரவுடி வினோத்தை துரத்தி பிடித்து சிறையில் அடைத்தனர் .

இந்நிலையில், ரவுடி ‘கருக்கா’ வினோத்தை இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவனை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என மனு அளித்தனர்.

போலீசார் தரப்பில் கொடுக்கப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் ரவுடி கருக்கா வினோத்தை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளனர்.

Total
0
Shares
Related Posts