விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் மும்மரமாக இருந்தனர் .
இந்நிலையில் இந்த வருட தீபாவளிக்காக புதிதாக தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை தொழிலாளர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது அந்த பட்டாசு மற்ற பட்டாசுகள் மீது விழுந்து வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.
எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கி படுகாயமடைந்ததோடு இதுவரை 13 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் .
இதேபோல் சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்த பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர் .