வெடிக்கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த வெடிகள் வெடித்து விபத்து..!!

திருவாரூர் அருகே வெடிக்கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த வெடிகள் வெடித்து விபத்துக்குள்ளானதில் அப்பகுதியே புகைமூட்டமாக காணப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வெடிக்கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த வெடிகள் வெடித்து விபத்துக்குள்ளானது . வெடிக்கடைகளில் தீ விபத்து ஏற்பட்டதை கண்ட அக்கபக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்து தீயை அணைக்க முயன்றனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

குடவாசல் சாலையில் 50-க்கும் மேற்பட்ட வெடிக்கடைகள் உள்ள நிலையில் தீடிரென ஏற்பட்ட வெடி விபத்தால் அப்பகுதியே பெரும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Total
0
Shares
Related Posts