ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் T20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆப்கானிஸ்தான் அணி மூன்று T20 போட்டிகள் போன்ற தொடரில் விளையாடுகிறது.
இதில் முதல் போட்டி பஞ்சாபில் உள்ள மொகாலி மைதானத்தில் நேற்று நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து ஆப்கன் அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் -இப்ராகிம் சத்ரான் ஆகியோர் களத்தில் இறங்கினர்.
நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். குர்பாஸ் 23 ரன்னிலும், சத்ரான் 25 ரன்னிலும் வெளியேற அடுத்து வந்த அஸ்மதுல்லா 29 ரன்கள் எடுத்தார்.
முகமது நபி 27 பந்துகளில் 3 சிக்சர் 2 பவுண்டரியுடன் 42 ரன்கள் எடுத்தார். ரஜிமுல்லா 19 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான் அணி 158 ரன்கள் எடுத்தது.
இதையும் படியுங்க : https://itamiltv.com/tncm-cm-mk-stalin-explained-about-health-issue/
இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட்டானார்.
மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து திலக் வர்மா 26 ரன்கள் எடுத்தார்.
விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஷிவம் துபே 40 பந்துகளில் 2 சிக்சர் 5 பவுண்டரியுடன் 60 ரன்கள் எடுத்தார்.
ரிங்கு சிங் 9 பந்துகளில் 16 ரன்கள் சேர்க்க 17.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
https://x.com/ITamilTVNews/status/1745719878345224457?s=20
இந்தியா மற்றும் ஆப்கன் அணிகளுக்கு இடையிலான 2 வது டி20 கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வரும் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது.