கடலூர் அருகே பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மருமகள் மீது மாமனார் கோடாரியை கொண்டு தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் ஆண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பவரும் , கருவாடிக்குப்பம் பகுதியை சேர்ந்த சத்தியா என்பவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் ஒன்றாக பணிபுரிந்து வந்தனர்.
பின்னர் இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்வதற்காக மணிமாறன் தனது பெற்றோரிடம் அனுமதி கேட்ட பொழுது மணிமாறன் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த சத்யாவை திருமணம் செய்ய அவரது தந்தை மற்றும் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவர்களது எதிர்ப்புகளை மீறி கடலூர் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, இருவரும் சிறிது காலம் சத்யாவின் வீட்டில் வசித்து வந்தனர்.
பின்னர் மணிமாறன் தனக்கு சேரவேண்டிய தந்தையின் நிலத்தில் ஒரு பகுதியை கேட்டுப் பெற்றுக்கொண்டார் பின்னர் அங்கு சொந்தமாக வீடு கட்டி வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் அவ்வப்போது மணிமாறன் வீட்டில் இல்லாத நேரத்தில்
அவரது தந்தை ஜெயராமன் மற்றும் மணிமாறனின் அண்ணன் கந்தவேல் ஆகியோர் மனைவி சத்யாவிடம் பிரச்சனை செய்து வந்துள்ளனர்.
இதனிடையே கடந்த 24 ஆம் தேதி மணிமாறன் வீட்டில் இல்லாத நேரத்தில் சத்யா மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் தனியாக வீட்டில் இருந்த பொழுது, அண்ணன் கந்தவேலு, தாய் ராஜசுந்தரியுடன் வீட்டிற்குள் நுழைந்த தந்தை ஜெயராமன்,
சத்யாவை சாதியின் பெயரால் தரக்குறைவாக பேசி அவர்கள் வைத்திருந்த வைத்திருந்த கட்டை கடுமையாக தாக்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் ஜெயராமன் வைத்திருந்த கோடாரியைக் கொண்டு சுவிட்ச் பாக்சில் வீசியுள்ளார். இதில் சுவிட்ச் பாக்ஸ் உடைந்துவிழுந்தது.
பின்னர் சத்யா தொலைபேசி மூலம் கணவரிடம் தகவல் தெரிவித்தவுடன் மணிமாறன் வீட்டிற்கு வந்துள்ளார். அவரையும் குடும்பத்தினர் அடித்து தரக்குறைவாக பேசியுள்ளனர். மேலும் மனிமாரணுக்கு பிரித்துக் கொடுத்துள்ள நிலத்தினை பதிவு செய்ய ஒத்துழைக்காமல் மணிமாறன் குடும்பத்தினரை வெளியேற வேண்டும் எனவும் வெளியேறாவிட்டால் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்த வீடியோ ஆதாரங்களுடன் மணிமாறன் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்தார்.
தங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தனது தந்தை ஜெயராமன், அண்ணன் கந்தவேல் மற்றும் தாய் ராஜசுந்தரி ஆகியோரை கைது செய்து தண்டனை வழங்கவேண்டும் என புகாரளித்துள்ளனர்.