பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம்பிடித்த கடலூர் இளைஞர் – வேட்டி சேலையில் கலந்து கொண்ட வெளிநாட்டினர்.

பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கடலூரைச் சேர்ந்த பத்மநாபன். இவர்களது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

கடலூர் அடுத்த திருமாணிக்குழி டி. புதுப்பாளையம் சேர்ந்தவர் பத்மநாபன். எம்.பி.ஏ பட்டதாரியான இவர், சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அதே நிறுவனத்தில் பணிபுரிந்த பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரோனமி டியாங்கோ குவாங்கோவுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

ஒரு வருடமாக காதலித்து வந்த அவர்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்து, பெண்ணின் பெற்றோர்களிடம் முதலில் சென்று தங்கள் காதலை தெரிவித்துள்ளனர். இவர்களில் காதலுக்கு அவர்கள் பச்சைக்கொடி காட்டியதும், இந்து முறைப்படி தமிழ் கலாச்சாரத்துடன் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணம் கடலூர் நடுவீரப்பட்டு வெள்ளக்கரை பகுதியில் இந்து முறைப்படி நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் கடலூர் பகுதியை சேர்ந்த அவரது உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்களது திருமணத்தை மணப்பெண்ணின் பெற்றோர் வயது முதிர்வு காரணமாக வீடியோ கால் மூலமாக பார்வையிட்டு வாழ்த்தினர்.

மேலும் பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்தவர்கள் தமிழ் கலாச்சார முறைப்படி வேஷ்டி, சேலை அணிந்து திருமணத்தில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.


இது குறித்து கூறிய மணமகள் ரோனமி, தங்கள் நாட்டில் மிக சாதாரணமாக திருமணம் நடைபெறுவது வழக்கம். ஆனால் தமிழ் கலாச்சாரம் மற்றும் இங்கு நடைபெறும் திருமணங்கள் மிக விமரிசையாகவும், திருவிழா போல் நடைபெறும் என்பது எங்களுக்கு தெரியும். எங்களது திருமணத்தில் அனைவரும் ஒன்று கூடி மன மகிழ்வுடன் ஆசிர்வாதத்துடன் நடைபெற்றது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்தார்.

Total
0
Shares
Related Posts