கட்டிகட்டியாக தங்கம்.. ரூ.257 கோடி ரொக்கம்.. – 120 மணி நேர ரெய்டில் அதிர்ந்த அதிகாரிகள்..!

உத்தரபிரதேசத்தில் வாசனை பொருட்கள் வியாபாரி பியூஷ் ஜெயின் வீட்டில் நடத்தப்பட்ட 120 மணி நேர சோதனையில் கட்டிக்கட்டியாக தங்கம் இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், வாசனைப் பொருட்கள் வியாபாரி பியூஷ் ஜெயின் வீட்டில் நடத்தப்பட்ட 120 மணி நேர மெகா ரெய்டில் சிக்கிய ரொக்கத்தை அதிகாரிகள் எண்ணி முடித்தனர். அதில் ரூ.257 கோடி பணமாகவே இருந்துள்ளது. இதோடு 16 ஆடம்பர சொத்துக்கள் குறித்த ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதில் 2 சொத்துக்கள் துபாயில் இருப்பது தெரியவந்துள்ளது. இதோடு கிலோ கிலோவாக தங்கமும் தோண்டத் தோண்ட கிடைத்துள்ளது.

கான்பூரைச் சேர்ந்த வாசனைப்பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலதிபர் பியூஷ் ஜெயின், வரி ஏய்ப்பு சம்பந்தமாக கைது செய்யப்பட்டார். மத்திய ஜிஎஸ்டி வரி விதிப்புச் சட்டத்தின் கீழ் இவர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. 120 மணி நேர விசாரணைக்குப் பிறகு பியூஷ் ஜெயின் கைது செய்யப்பட்டார். 50 மணி நேரம் துருவித் துருவி விசாரிக்கப்பட்டு பிறகு கைது செய்யப்பட்டார்.

கடந்த வாரத்தில் வருமானவரித்துறை மற்றும் ஜிஎஸ்டி தலைமை இயக்குனரக அதிகாரிகள், ஜிஎஸ்டி புலானாய்வு துறை ஆகியவை இணைந்து ரெய்டு நடத்தினர். அப்போது ரொக்கமாகவே ரூ.257 கோடி வைத்திருந்தது கண்டு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.

கனவ்ஜியில் உள்ள பியூஷ் ஜெயினின் பரம்பரை பங்களாவில் போலீசார் 18 லாக்கர்கள் இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர். இதோடு 500 சாவிகளும் புழக்கத்தில் இருப்பது தெரியவந்துள்ளது, எதற்கு இத்தனை சாவிகள் என்பதும் கடும் சந்தேகத்தை அதிகரித்தன.

பியூஷ் ஜெயினின் வீட்டுப் பணியாள் ஆஜ் தக் தொலைக்காட்சிக்கு டிசம்பர் 22ம் தேதி கூறும்போது, ரெய்டு வந்தபோது பியூஷ் ஜெயின் டெல்லியில் இருந்தார். இவர் தந்தையின் சிகிச்சைக்காக ஒட்டுமொத்த குடும்பமும் டெல்லியில் இருந்தது. வீட்டில் பியூஷ் ஜெயினின் 2 மகன்கள் மட்டும்தான் இருந்தனர். விசாரணை அதிகாரிகள் அழைக்கவும் அவர்கள் கான்பூர் திரும்பினர் என்றார்.

கான்பூரின் இத்தர்வாலியில் வாசனைப்பொருட்கள் விற்கும் இடத்துக்கே பெயர் பெற்ற இடத்தில்தான் பியூஷ் ஜெயின் தன் வர்த்தகத்தை நடத்தி வருகிறார். இவருக்கு கான்பூர், மும்பையில் அலுவலகங்கள் உண்டு. இவர் சுமார் 40 நிறுவனங்களின் மூலம் தன் வர்த்தகத்தை நடத்துவதும் இந்த ரெய்டின் போது தெரியவந்தது.

இந்த ரெய்டில் கணக்கில் வராத சந்தன எண்ணெய், மற்றும் பிற வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டன. வரலாற்றில் இதுதான் மிகப்பெரிய பறிமுதல், ரெய்டு என்று விவேக் ஜோஹ்ரி என்ற மத்திய மறைமுக வரி மற்றும் கஸ்டம்ஸ் வரி தலைவர் கூறியுள்ளார்.

ஆதாரங்களின்படி, பியூஷ் ஜெயின் ஒவ்வொரு ஒன்று, ஒன்றைரை வருடங்களுக்கு தனது காவலாளிகளை மாற்றுவார். ஆனந்தபுரியில் உள்ள தனது பங்களாவில், பியூஷ் ஜெயின் மாதம் ரூ.7,500 சம்பளத்தில் இரண்டு வாட்ச்மேன்களை மட்டுமே நியமித்துள்ளார், மேலும் அவர்கள் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

பியூஷ் ஜெயின் ஆடம்பரமான கார்களைத் தவிர்ப்பார் மற்றும் பழைய வாகனங்களையே ஓட்டுவார். அவர் தனது 15 வயது மகன் பிரத்யுஷ் பெயரில் பதிவு செய்யப்பட்ட டொயோட்டா கார் மற்றும் போக்ஸ்வேகன் வைத்திருந்தார்.

பியூஷ் ஜெயின் சமாஜ்வாதி கட்சியுடன் தொடர்பு வைத்திருப்பதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார்.

Total
0
Shares
Related Posts