உலகக்கோப்பை 2023 : இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு..!!

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில்இந்தியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது . லக்னோவில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.

இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச செய்ய முடிவு செய்துள்ளது. இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சந்தித்த 5 போட்டியில் 5 திலும் வெற்றி கண்டு புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது . இதேபோல் இங்கிலாந்து அணி சந்தித்த 5 போட்டியில் 1ல் வெற்றியும் 4 ல் தோல்வியடைந்தும் புள்ளிப்பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் உள்ளது .

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

Total
0
Shares
Related Posts