உலக கோப்பை கிரிக்கெட் இன்று இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதல்..!!

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது .

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை 28 லீக் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. அதன்படி தற்போது தென் ஆப்ரிக்க அணி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 5 போட்டிகளில் விளையாடி ஐந்திலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, ரன்ரேட்டில் சற்று பின் தங்கியுள்ளதால் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

இந்தப்பக்கம் நியூசிலாந்து அணி 4 வெற்றி 2 தோல்வியுடன் மூன்றாவது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 4வது இடத்திலும் உள்ளன. இலங்கை அணி 4 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி, மூன்றில் தோல்வி என 5வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் லக்னோவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் 29வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஒருநாள் போட்டியில் இந்த இரு அணிகளும் இதுவரை 106 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 57ல் இந்தியாவும், 44ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டையில் முடிந்தது. 3 ஆட்டம் முடிவில்லாமல் போனது. அதேபோல் உலகக் கோப்பையில் மோதிய 8 ஆட்டங்களில் 4ல் இங்கிலாந்தும், 3-ல் இந்தியாவும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது.

இந்நிலையில் இன்று பிற்பகல் நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

Total
0
Shares
Related Posts