மத்தியகிழக்கு அரபிக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன் உருவான பிபர்ஜாய் புயல் இன்று மாலை குஜராத்தின் ஜக்காவ் துறைமுகம் அருகே கரையை கடக்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிருப்பதாவது :
மத்தியகிழக்கு அரபிக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன் உருவான பிபர்ஜாய் புயல் இன்று மாலை குஜராத்தின் ஜக்காவ் துறைமுகம் அருகே கரையை கடக்க உள்ளது
பிபர்ஜாய் புயல் தாக்கம் காரணமாக குஜராத்தின் கட்ச் கடற்பகுதியில் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழலாம் என்றும் போர்பந்தர் மற்றும் துவாரகாவில் கடும் காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .
பிபோர்ஜாய் புயல், இன்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணிக்குள் குஜராத்தின் ஜக்காவ் துறைமுகம் அருகே கரையைக் கடக்க உள்ள நிலையில் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 50,000 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் . இந்த அதி தீவிர புயலை எதிர்கொள்ள இந்திய கடற்படை தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .