Site icon ITamilTv

பொது மக்களை அச்சுறுத்திய ஃபெஞ்சல் புயல் : சென்னையில் மீட்பு பணிகள்!!

Spread the love

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பொது மக்களை அச்சுறுத்திய ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 197 வார்டு பனையூர் பகுதியில் உள்ள ராஜிவ்காந்தி சாலை, பணியூர் குப்பம் கடலோர பகுதியில் ஏதாவது பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா என்று 197 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மேனகா சங்கர் நேரில் சென்று அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டு பார்வையிட்டார். தங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் உடனே என்னை அழைக்கவும் என்று மாமன்ற உறுப்பினர் மேனகா சங்கர் கூறினார். உடன் அதிமுக வட்ட கழக செயலாளர் உத்தண்டி எம்.சங்கர் மற்றும் நிர்வாகிகள், பொது மக்கள் அனைவரும் இருந்தனர்.

பொது மக்களை அச்சுறுத்திய ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதால்
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் 199 வார்டில் அமைந்துள்ள காந்திநகர் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு சோழிங்கநல்லூர் மத்திய பகுதி செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் வழிகாட்டுதல்படி செயல்படும் மாமன்ற உறுப்பினர் மற்றும் வட்டக் கழக செயலாளர் ஜி.சங்கர் வீடு வீடாக சென்று உணவு வழங்கினர். உடன் இளைஞர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுப்பாக்கம் ஊராட்சியில் பொது மக்களை அச்சுறுத்திய ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அப்பகுதியில் அங்கங்கே மரங்கள் சாய்ந்து கிடந்தன. அது மட்டும் இல்லாமல் கால்வாய் அடைப்பு காணப்பட்டதால் இதனை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் மா. ஆறுமுகம் மக்கள் நலன் கருதி ஒவ்வொரு தெருக்களாக சென்று பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களை வைத்து மரங்களை அப்புறப்படுத்தியும், கால்வாயில் உள்ள அடைப்புகளை தூய்மை பணியாளர்களை வைத்து எடுக்கும் பணி நடைபெற்றது. பணிகள் நடக்கும் இடத்தினை அங்கு இருந்து பார்வையிட்டு தூய்மை பணியாளர்களுக்கு என்ன தேவை என்று அறிந்து ஊராட்சி மன்ற தலைவர் மா.ஆறுமுகம் செய்து கொடுத்தார். உடன் ஊராட்சி செயலர் ஏழுமலை, வார்டு உறுப்பினர்கள் இருந்தனர்.


Spread the love
Exit mobile version