Site icon ITamilTv

சாகர் தீவுகளுக்கும் கேபுபாராவுக்கு இடையே கரையை கடந்தது ரீமால் புயல்..!!

Remal storm

Remal storm

Spread the love

வங்கதேசம், மேற்குவங்கம் கடற்கரையை ஒட்டிய சாகர் தீவுகளுக்கும் கேபுபாராவுக்கு இடையே ரீமால் புயல் ( Remal storm ) கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

ரீமால் புயல் கரையை கடந்த போது மணிக்கு 110 – 120 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 135 கிலோமீட்டர் வேகத்திலும் வீசிய சூறைக்காற்று வீசியது.

ரீமால் புயலின் தாக்கத்தால் மேற்குவங்கத்தின் சாகர் தீவு பகுதியில் பலத்த சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சேதம் அடைந்த பகுதிகளில் மீட்புப்பணிகளை தீவிரப்படுத்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பாதிக்கப்பட்ட மக்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.

Also Read : இந்த ஆண்டாவது மாணவர்களுக்கு லேப்டாப் தருவீர்களா..? – எடப்பாடி பழனிசாமி

இதையடுத்து வடக்கு வங்கக்கடலில் உருவான ‘ரீமால் புயல்’ கரையை கடந்த நிலையில் 9 துறைமுகங்களுக்கு விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது .
.
புயல் கரையை கடந்ததை அடுத்து சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் ( Remal storm ) காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Spread the love
Exit mobile version