கர்நாடகாவில், பூத கோலா (bhoota kola) நடனம் ஆடி கொண்டிருந்த போதே நடன கலைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில், கந்து அஜிலா என்ற கலைஞர் கடவுள் வேடமிட்டு பூத கோலா (bhoota Kola) நடனம் ஆடி கொண்டிருந்த போதே மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
கர்நாடகாவின் புகழ்பெற்ற பாரம்பரிய கலையான ‘பூத கோலா’ நடனத்தை அம்மாநிலத்தின் கடற்கரையோர பகுதிகளில் அமைந்துள்ள கிராமத்தில் உள்ள கலைஞர்கள் பூத ஆராதனா செய்வார்கள். இந்த கலைஞர்கள் தெய்வ நார்தகஸ் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், அங்குள்ள தக்ஷினா கன்னடா மாவட்டத்தில், பூத கோலா நடனத்தின்போது, கந்து அஜிலா என்ற கலைஞர் திடீரென நடனம் ஆதிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்துள்ளார். அப்போது, முதலில் அவர் நடிக்கிறார் என்று எண்ணிய அங்கிருந்த மக்கள் பின்னர், அவர் உண்மையிலேயே மயங்கி விழுந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அங்கு விரைந்து சென்று மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பார்த்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவரது உடலை மீது மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பிறகு, அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த கலைஞர் கந்து அஜிலா “கடபா” பகுதியைச் சேர்ந்தவர். இவர், பூத கோலா நடனத்தில் மிகவும் தேர்ந்த கலைஞர் என்று அழைக்கப்படுகிறார். இந்நிலையில், நடனம் ஆதிக் கொண்டிருக்கும் போதே கலைஞர் மாரடைப்பால் உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.