Dam broke in Kenya : கடந்த மார்ச் மாதம் முதலே கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் கனமழை பெய்து வருகிறது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக தலைநகர் நைரோபி வெள்ளத்தில் மிதக்கிறது.
கனமழை வெள்ளத்தால் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்கு இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் குடியிருப்புகளை மூழ்கடித்துள்ளதால் கிட்டதட்ட ஒன்றரை லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிற்கதியாக நிற்கின்றனர்.
இதற்கிடையே, தற்போது கென்யாவில் உள்ள மிகப்பழமையான அணையான கிஜாப் அணை வெள்ளத்தில் சேதம் அடைந்து, அதன் தடுப்புச்சுவர் உடைந்ததில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் நீர் புகுந்தது Dam broke in Kenya.
இதனால், பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி இதுவரையிலும் 40 பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வெள்ளத்தில் சிக்கி பலர் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது. கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதலே கனமழை வெளுத்து வரும் சூழலில்,
அங்கு பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளன. இதனிடையே, எதிர்பாராத மழையை எதிர்கொள்ள முடியாமல், கென்யா அரசு உலக நாடுகளிடம் உதவி கோரியுள்ளது.
இதையும் படிங்க : தெலங்கானா முதலமைச்சருக்கு டெல்லி போலீஸ் சம்மன்