ITamilTv

AUSvSA : கிரிக்கெட் வரலாற்றில் இது 2 வது முறை வார்னர் செய்த அரிய சாதனை

Spread the love

ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா இடியேயான 2 வது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தொடக்கம் முதல் அதிரடி காட்டியது. குறிப்பாக அணியின் மூத்த நட்சத்திர வீரரான டேவிட் வார்னருக்கு இது 100 டெஸ்ட் போட்டியாகும்.

தொடர்ந்து பல போட்டிகளாக ரன் குவிக்க திணறி வந்தார், ஒற்றை இலக்கில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதனால் இந்த போட்டியில் சீராக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இந்த போட்டியின் தொடக்கம் முதலே நிதானத்தை தொடர்ந்த வார்னர், சீரான இடைவெளியில் ரன் குவித்தார்.

warner

தென் ஆப்பிரிக்கா வீரர்கள் பந்து வீச்சின் வேகம் மிக தீவிரமடைந்தது. இருப்பினும் அதனை நேர்த்தியாக எதிர்கொண்டு தொடர்ந்து அணியின் ஸ்கோரை நகர்த்தினார். தனது சிறப்பான ஆட்டத்தால் சதம் அடித்தார், சர்வதேச கிரிக்கெட்டில் தனது 100 வது போட்டியில் சதம் அடிக்கும் 10 வது வீரர் என்ற பெயர் பெற்றார்.

100 ரன்கள் கடந்தும் நிதனமாக ரன் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா வேக பந்து வீச்சாளர் நர்ட்ஜெ தனது அசுர வேக பந்து வீச்சால் ஆஸ்திரேலியாவை அச்சுரித்தினார். இவர் வீசிய பந்தில் வார்னர் வலது  கையில் அடிப்பட்டு காயம் ஏற்பட்டது. அதனையும் தாக்கு பிடித்து வார்னர் தனது ரன் குவிப்பை தொடர்ந்தார்.

255 பந்துகளை எதிர்கொண்ட வார்னர் இரட்டை சதம் அடித்து அசத்தினார். 100 வடக்கு போட்டியில் 200 ரன்கள் கடந்த 2 வது வீரர் டேவிட் வர்னர் என்ற பெயர் பெற்றார். பல நாட்களாக வார்னர் பேட்டிங் குறித்து விமர்சனமும், கேள்வியும் உலாவி வந்தது, அதற்கு பெரும் முற்று புள்ளி வைக்கும் வண்ணம் அவரது இரட்டை சதம் அமைந்தது.

மேலும் வார்னர் நடக்கவிருக்கும் ஆஷஸ் தொடருடன் விடை பெறுவதால் இந்த தொடர் அவருக்கு மிக முக்கியமானதாக பார்க்கபடுகிறது.


Spread the love
Exit mobile version