திருமுல்லைவாயலில் பூட்டிய வீட்டிற்குள் தந்தை-மகள் உடல்கள் அழகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அருகே திருமுல்லைவாயிலில் 5 மாதங்களாக பூட்டிக் கிடந்த வீட்டில் இருந்து தொடர்ந்து துர்நாற்றம் வீசி வந்துள்ளது . இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் கதவை உடைத்து பார்த்தபொழுது தந்தை-மகள் ஆகியோரின் உடல்கள் அழுகிய நிலையில் இருந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 70 வயதான தந்தை சாமுவேல் சங்கர், 35 வயதான மகள் சிந்தியா உயிரிழந்த நிலையில், 4 மாதங்களுக்கு பிறகு உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Also Read : கடமையை செய்யத்தவறிய காவலர் – மாநில மனித உரிமைகள் ஆணையம் எடுத்த அதிரடி நடவடிக்கை..!!
இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
சாமுவேல் சங்கருக்கு வீட்டில் வைத்து டயாலிஸிஸ் சிகிச்சை செய்து வந்துள்ளனர் அப்படி ஒருநாள் சிகிச்சையின்போது சாமுவேல் உயிரிழந்ததால் மகள் சிந்தியா வாக்குவாதம் செய்ததாகவும்
வாக்குவாதம் செய்த சிந்தியாவை மருத்துவர் தள்ளிவிட்டபோது உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தந்தை மகள் இருவரும் உயிரிழந்ததால் அச்சத்தில் வீட்டை பூட்டிவிட்டு மருத்துவர் சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.