ITamilTv

Deadly Virus : மீண்டும் ஒரு பேரழிவுக்கு திட்டமிடும் சீனா?

Deadly Virus

Spread the love

Deadly Virus : 100% மனிதர்களிடம் தீவிர தொற்று மற்றும் பாதிப்பு ஏற்படுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்த கூடிய புதிய வைரஸ் ஆய்வில் சீனா ஈடுபட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி 3 ஆண்டுகளாக நாடுகளை புரட்டி போட்ட நிலையில்,

அந்த பாதிப்புகளில் இருந்து இப்போதுதான் மக்கள் மீண்டு வருகின்றனர். ஆனாலும், பல நாடுகளில் இயல்பு நிலை இன்னுமும் முழுமையாக திரும்பவில்லை.

இந்த நிலையில், மீண்டும் தற்போது 100% மனிதர்களை கொல்ல கூடிய திறன் வாய்ந்த கொடிய வைரசை வைத்து சீனா ஆய்வில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது.

சீன ராணுவத்திடம் இருந்து பயிற்சி பெற்ற டாக்டர்கள் இதற்கான ஆய்வில் ஈடுபட்டனர் என்றும், இதன்படி, இந்த புதிய, கொடிய கொரோனா போன்ற வைரசை எலிகள் சிலவற்றுக்கு கொடுத்து பரிசோதனை முயற்சியை தொடங்கி உள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

https://itamiltv.com/january-18th-2024-daily-rasi-palan-in-tamil-for-january-17th-2024-indraya-rasi-palan-todays-rasi-result-can-be-seen-in-this-compilation/

இந்த ஆய்விற்கு பயன்படுத்தப்படும் எலிகளுக்கு என்ன ஏற்படும் என்று பார்ப்பதற்காக அவற்றுக்கு, வைரசை உட்செலுத்தி பரிசோதனை நடத்தப்பட்டது.

இதுதவிர, வேறு 4 எலிகளுக்கு வைரசை உட்செலுத்திடாமல் மற்ற அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன.

Deadly Virus

அந்த ஆய்வின் முடிவில், வைரசால் தொற்று ஏற்பட்ட அனைத்து எலிகளும் 7 முதல் 8 நாட்களில் உயிரிழந்து விட்டன.

இந்த ஆய்வின்போது, முதல் 5 நாட்களில் எலிகளின் எடை தொற்று ஏற்பட்ட பின்னர் குறைந்து போனது. பின்னர், அவற்றின் இயக்கமும் மந்தமடைந்து, கண்களும் வெளிறி காணப்பட்டுள்ளன.

https://x.com/ITamilTVNews/status/1747881163652472867?s=20

ஆய்வின் முதல் 3 நாட்களில் எலிகளுக்கு பாதிப்பு குறைவாக காணப்பட்டபோதும், அடுத்த 3 நாட்களில் பல முக்கிய உறுப்புகளில் தொற்று பரவி அதிக பாதிப்பு உண்டாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் மூலம் இந்த வைரசானது, எலிகள் தவிர மனிதர்களிலும் 100% தீவிர தொற்றும் மற்றும் பாதிப்பு ஏற்படுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்த கூடிய திறன் படைத்தது என தெரிய வந்துள்ளது.

இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும்போது அதுவும் கொடிய தாக்கங்களை ஏற்படுத்த கூடிய ஆபத்து உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, நடப்பு ஜனவரியில் ஜே.என்.-1 வகை கொரோனா வைரசால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடும் என சீன ஆய்வாளர்கள் எச்சரிக்கையும் விடுத்து உள்ளனர்.

முன்னதாக சீனாவின் உகான் நகரில் ஆய்வகத்தில் வைத்து கொரோனா வைரசானது உற்பத்தி செய்யப்பட்டது என உலக நாடுகள் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தன.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு அதுபற்றிய அறிக்கைகளை அளிக்கும்படி சீனாவிடம் கேட்ட போதும் இதனை மறுத்த சீனா அதற்கு உடன்படாமலேயே இருந்தது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் மனிதர்களில் 100% உயிரிழப்பை ஏற்படுத்த கூடிய கொடிய வைரசை (Deadly Virus) வைத்து சீனா ஆய்வு செய்து வரும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது உலக நாடுகள் இடையே பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.


Spread the love
Exit mobile version