சவுதி அரேபியாவில் நிலவி வரும் கடுமையான கடும் வெப்ப அலையின் காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட பலர் உயிரிழந்த நிலையில் தற்போது தமிழகர்கள் 10 உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது .
உலகில் இருக்கும் அனைத்து இஸ்லாமியர்களும் ஒரு முறையாவது ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள வேண்டும் என வாழ்நாள் கனவாக வைத்துள்ளனர் . அதன்படி சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்டு தோறும் ஏராளமான இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read : தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!!
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணம் கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கியது. இதற்காக சுமார் 15 லட்சம் பேர் சவுதி அரேபியாவிலுள்ள புனித நகரமான மெக்காவில் திரண்டுள்ளனர்.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் நிலவும் கடும் வெப்ப அலையால், இந்தியர்கள் 98 பேர் உட்பட ஹஜ் புனிதப் பயணிகள் சுமார் 1,301 பேர் உயிரிழந்துள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது.
பல லட்சம் பேர் மேற்கொண்ட இந்த புனித யாத்திரையில் தமிழகத்திலிருந்து 5,801 பேர் இந்த புனித பயணத்தை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் இந்த ஹஜ் புனித பயணத்தின் போது வெயிலின் தாக்கத்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது