சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கின் குற்றவாளி சதீஷுக்கு மகளிர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்ய பிரியா என்ற கல்லூரி மாணவி, ரயில் முன்பு தள்ளி கொலை கொடூரமாக கொலை செய்யப்பட்டார் .
இந்த வழக்கில் சதிஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார் . இந்நிலையில் திட்ட தட்ட 2 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த 27ம் தேதி மகளிர் நீதிமன்றம் சதிஷ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கி தண்டனை குறித்த விவரங்கள் 30 ஆம் தேதி வெளியிடப்பட்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
Also Read : 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
இந்நிலையில் தற்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள சதிஷ்கு மகளிர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.
பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, கொலை வழக்கின் கீழ் மரண தண்டனையை நிறைவேற்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.