Site icon ITamilTv

தள்ளாட வைக்கும் வெப்ப அலை – சவுதி அரேபியாவில் உயிரிழந்த ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 1,301 ஆக உயர்வு..!!

Saudi Arabia

Saudi Arabia

Spread the love

சவுதி அரேபியாவில் நிலவி வரும் கடுமையான கடும் வெப்ப அலையின் காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் சென்ற 1,301 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலகில் இருக்கும் அனைத்து இஸ்லாமியர்களும் ஒரு முறையாவது ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள வேண்டும் என வாழ்நாள் கனவாக வைத்துள்ளனர் .

அதன்படி சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்டு தோறும் ஏராளமான இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read : சென்னானூர் அகழாய்வில் கற்கால கருவி கண்டுபிடிப்பு..!!

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணம் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இதற்காக சுமார் 15 லட்சம் பக்தர்கள் சவுதி அரேபியாவிலுள்ள புனித நகரமான மெக்காவில் திரண்டுள்ளனர்.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் நிலவும் கடும் வெப்ப அலையால், இந்தியர்கள் 98 பேர் உட்பட ஹஜ் புனிதப் பயணிகள் சுமார் 1,301 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உயிரிழந்த யாத்ரீகர்கள் பலரிடம் அடையாள ஆவணங்கள் இல்லாததால், அவர்களை அடையாளம் காணும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் . இறந்தவர்கள் மெக்காவில் புதைக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 660க்கும் மேற்பட்ட எகிப்தியர்கள் எனவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.


Spread the love
Exit mobile version