இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் கடலில் 60 அடி ஆழத்தில் கடலுக்குள் சென்று தேசிய கொடியை ஏற்றி, அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வெள்ளையர்களை எதிர்த்து போராடி பெற்ற சுதந்திரத்தின் மகத்துவத்தை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையில் நாடு முழுவதும் இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்லாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நாட்டின் விடுதலைக்காக அகிம்சை வழியில் போராடிய மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து டெல்லியில் உள்ள செங்கோட்டையில் மக்கள் முன் தேசியக்கொடியை பிரதமர் மோடி ஏற்றினார்.
அதே போல் சென்னை கோட்டையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தமிழகம் முழுவதும் சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை மற்றும் புதுச்சேரியில் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் கிழக்கு கடற்கரைசாலை நீலாங்கரை கடலில் 1 கிலோ மீட்டர் தூரத்தில், 60 அடி ஆழத்தில் கடலுக்குள் சென்று தேசிய கொடியை ஏற்றி தங்களது நட்டு பற்றை வெளிபடுத்தி அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.