ITamilTv

பெரும் சர்ச்சையை கிளப்பிய பைக் நம்பர் ப்ளேட்… – இந்த வார்த்தைதான் அதற்கு காரணமாம்..!

Spread the love

டெல்லியில் இருசக்கர வாகனத்திற்கு கொடுக்கப்பட்ட நம்பர் ப்ளேட்டால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

புதிய இருசக்கர வாகனம் வாங்கும் உரிமையாளர்கள் வாகன பதிவெண்களில் உள்ள E மற்றும் X என்ற எழுத்துக்கள் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி கெடிலம் ஆற்றில் காருடன் சாகசம்.. அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்!
பொதுமக்கள் முகம் சுளிப்பதற்கான காரணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வழங்கப்படும் பதிவெண் தகடுகளில் ‘SEX’ என்ற எழுத்துக்களே காரணம் என கூறப்படுகிறது.


பொதுமக்கள் வாங்கும் ஒவ்வொரு வாகனத்திற்கும் பதிவெண் அவசியம். வாகனம் தொலைந்து போனாலோ, விபத்தில் சிக்கினாலோ, வாகனத்தின் உரிமையாளர் இன்னாரென உறுதி செய்யவோ, அல்லது அந்த வாகனத்தை பயன்படுத்தி குற்றம் நடைபெற்றிருந்தால் குறிப்பிட்ட நபரை கண்டுபிடிக்கவோ பதிவெண் மிகவும் அவசியமாகிறது. அனைத்து நாடுகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இந்தியாவில் மாவட்டங்கள் மற்றும் வாகன வகைகளின் அடிப்படையில் பதிவெண் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பதிவு செய்யப்படும் அனைத்து வாகனங்களின் பதிவெண்களும் TN என்று தொடங்கும். ஆந்திராவில் AP என்றும், கேரளாவில் KL என்றும், தெலுங்கானாவில் TS என்றும், கர்நாடகாவில் KA என்றும் பதிவெண்கள் தொடங்கும்

இந்தியாவில் வெள்ளை நிற நம்பர் பிளேட்டுகளில் கறுப்பு நிறத்தில் எண்கள் இருந்தால் தனி நபரின் வாகனம் என அடையாளப்படுத்தப்படுகிறது. மஞ்சள் நிற நம்பர் பிளேட்டில் கறுப்பு நிறத்தில் எண்கள் இருந்தால் வணிக ரீதியாக என குறிக்கப்படுகிறது.

பச்சை நிற நம்பர் பிளேட்டில் வெள்ளை நிறத்தில் எண்கள் இருந்தால் மின்சார வாகனங்கள் என அடையாளப்படுத்தப்படுகிறது. நீல நிற நம்பர் பிளேட்டில் வெள்ளை நிறத்தில் எண்கள் இருந்தால் தூதரகம் அல்லது தூதுவர்கள் பயன்படுத்துவது என குறிக்கிறது.

இதன் அடிப்படையில்தான் டெல்லியிலும் வாகனங்களுக்கு பதிவெண் வழங்கப்பட்டு வருகிறது. டெல்லியை பொறுத்த முதலில் வரும் DL எனும் 2 எழுத்துக்கள் டெல்லி மாநிலத்தை குறிக்கிறது. பின்னர் வரும் 2 எண்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மாவட்டத்தை குறிக்கும்.

அதன் பின்னர் வரும் எழுத்துக்களில் முதல் எழுத்து C என்பது காரையும் S என்பது இருசக்கர வாகனத்தையும் குறிக்கும். அடுத்து வரும் எழுத்து மற்றும் எண்கள் வழக்கமான தொடர்ச்சி எண்களாக இருக்கும். அந்த வரிசையில் தற்போது வந்துள்ள எழுத்துக்கள்தான் பிரச்சனையை தூசி தட்டி எழுப்பப்பட்டுள்ளது.

 

சமீபத்தில் டெல்லியில் ஒரு இளம்பெண் தீபவாளி பரிசாக தந்தையிடம் இருந்து ஒரு ஸ்கூட்டி வாங்கி உள்ளார். ஆனால் தற்போது அதை பயன்படுத்த முடியவில்லை. அதற்கு காரண்ம் அதில் இருந்த பதிவெண்கள்தான். மேலே குறிப்பிட்டபடி வரிசையில் அவருக்கு வந்த பதிவெண் என்ன தெரியுமா? DL35SEX0000 என்பதுதான் அது.

இந்த எண்களை ஒன்றாக சேர்த்து பார்த்தால் எதுவும் தெரியாது. ஆனால் பிரித்துப் படித்தால் எல்லாருமே முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. அதற்கு காரணம் இந்த எண்களில் இடையில் உள்ள SEX எனும் எழுத்துக்கள்தான். அந்த பதிவெண்ணை பார்த்து மற்றவர்கள் கேலி செய்ததால் ஸ்கூட்டியை பயன்படுத்தாமல் ஓரங்கட்டி விட்டார் அந்த பெண்.

இதை அடுத்து சம்பந்தப்ட்ட பதிவெண்ணை மாற்றித் தருமாறு அந்த பண்ணின் தந்தை இருசக்கர வாகன விற்பனையாளரை அணுகினார். ஆனால் அவருக்கு உதவுவதற்கு பதில் அந்த நபர், இதுபோன்ற எண்கள் கொண்ட வாகனங்கள் டெல்லியில் ஆயிரக்கணக்காக ஓடுகின்றன.

அந்த எண்களை மாற்றித் தரும் அளவுக்கு உங்கள் மகள் ஒன்றும் நாட்டின் ராணி அல்ல என கேலி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த பதிவெண் ஆன்லைனில் வந்ததால் மாற்றித் தர முடியாது எனவும் கூறிவிட்டார். இந்த சம்பவம் குறித்து பதில் அளித்த டெல்லி போக்குவரத்து ஆணையர் கேகே தஹியா, ஒரு வாகனத்திற்கு வழங்கப்பட்ட எண்ணை மாற்றித் தருவது சாத்தியமல்ல என்றும் பதிவெண் வழங்குவதில் வரிசை எண் அடிப்படையிலேயே வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.


Spread the love
Exit mobile version