அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான டிமாண்டி காலனி 2 திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்து உள்ளது.
சுதந்திர தினத்தன்று சியான் விக்ரமின் தங்கலான் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆன திரைப்படம் டிமாண்டி காலனி 2. கடந்த 2015ம் ஆண்டு இந்த படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆகி மாபெரும் ஹிட் அடித்தது.
இதையும் படிங்க : மீண்டும் பாலியல் படுகொலை! கழுத்து எழும்பு முறிக்கப்பட்டு.. புதருக்குள் பெண் சடலம்!!
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவெடுத்த நிலையில், இப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் உதவி இயக்குனர் தான் இயக்குவதாக முதலில் கூறப்பட்டது.
அதன் பின்னர், அஜய் ஞானமுத்து விக்ரமை வைத்து கோப்ரா படத்தை இயக்கினார். ஆனால், அந்த படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், அதில் இருந்து எப்படியாவது மீண்டு வர வேண்டும் என நினைத்த அஜய் ‘டிமாண்டி காலனி 2’ படத்தை தானே இயக்குவதாக அறிவித்தார்.
இரண்டாம் பாகத்திலும் அருள்நிதி தான் ஹீரோவாக நடித்துள்ளார். பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்பட்டத்தில் பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா அருள் நிதிக்கு தங்கையாக நடித்துள்ளார்.
நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆன தங்கலான் படத்துக்கு போட்டியாக வெளிவந்த இப்படத்துக்கு முதல் நாளில் கம்மியான தியேட்டர்களே கிடைத்தன.
ஆனால், ரிலீசுக்கு பின்னர் படம் அமோக வரவேற்பை பெற்றதால், இரண்டாம் நாளில் இருந்து அப்படத்திற்கான காட்சிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. அதுமட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் டிமாண்டி காலனி 2 திரைப்படம் அதிரடி சாதனை காட்டியுள்ளது.
அதாவது, இப்படம் நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.2.76 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த லால் சலாம் திரைப்படத்தை விட அதிக வசூல் செய்துள்ளது.
லால் சலாம் திரைப்படம் முதல் நாளில் ரூ.2.73 லட்சம் மட்டுமே வசூலித்திருந்த நிலையில், அதைவிட கூடுதலாக 3 லட்சம் வசூலை வாரிக்குவித்துள்ளது டிமாண்டி காலனி 2 திரைப்படம்.