சாஃப்டா் அரசு பள்ளி மாணவா்கள் உயிரிழப்பின் எதிரொலி : புதுக்கோட்டையில் 100 பள்ளிக் கட்டடங்கள் தரைமட்டம்!

demolish-100-dangerous-school-buildings
demolish 100 dangerous school buildings

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆபத்தான நிலையில் உள்ள 100 பள்ளிக் கட்டடங்களை இடிக்க ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலியில் சாஃப்டா் அரசு உதவி பெறும் பள்ளியின் கழிப்பறை சுவா் இடிந்து விழுந்து 3 மாணவா்கள் உயிரிழந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்யவும், தரமற்ற கட்டடங்களை உடனடியாக இடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளில் உள்ள இடித்து அகற்றப்பட வேண்டிய கட்டடங்கள், பராமரிப்புக்குத் தேவைப்படும் கட்டடங்கள், புதிதாகத் தேவைப்படும் கட்டடங்கள் ஆகியவற்ற கணக்கெடுக்கப்பட்டன. அதில், தகுதியற்ற நிலையில் உள்ள கட்டடங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் படிப்படியாக இடிக்கப்பட்டு வருகின்றன.

demolish-100-dangerous-school-buildings
demolish 100 dangerous school buildings

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 325 பள்ளிகளை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில், மிகவும் ஆபத்தான மற்றும் தகுதியற்ற நிலையில் உள்ளதாக 100 பள்ளிக் கட்டடங்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, இந்தக் கட்டடங்களை இடிக்க பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

Total
0
Shares
Related Posts