ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த பஹனகா பள்ளிக்கு செல்ல மாணவ, மாணவிகள் பயப்படுவதாக பெற்றோர் புகார் அளித்துள்ள நிலையில் பள்ளியின் ஒரு பகுதியை இடித்து மீண்டும் கட்டும் பணிகளை பள்ளி நிர்வாகம் தொடங்கியுள்ளது.
கடந்த ஜூன் 2ஆம் தேதி இரவு ஒடிசா மாநிலம் பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்று கொண்டிருந்த யஷ்வந்த்பூர் – ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், மற்றும் சரக்கு ரயில் மோதி நேரிட்ட விபத்தில் 288 பேர் பலியானதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இன்னும் இரண்டு வாரங்களில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்படும் நிலையில், தற்போது உயிரிழந்தோரின் உடல்கள் பஹனகா உயர்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது.
இதனால், கோடை விடுமுறை முடிந்து பஹனகா அரசு உயர்நிலை பள்ளிக்கு செல்வதற்கு மாணவ, மாணவிகள் அச்சப்படுவதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பள்ளியின் ஒரு பகுதியை இடித்து புதிதாக கட்டும் பணிகளை பள்ளி நிர்வாகம் தொடங்கியுள்ளது. மேலும், கோடை விடுமுறை முடிவதற்குள், இந்த பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.