திருப்பதி கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவது வேதனை அளிக்கிறது இதை கடுமையாக கண்டிக்கிறேன் என ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது :
5 ஆண்டுகள் முதலமைச்சராக ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சாத்திய நான், எதற்காக கையெழுத்திட்டு சாமி தரிசனம் செய்ய வேண்டும்.
Also Read : 2ம் வகுப்பு மாணவரை நரபலி கொடுத்த பள்ளி நிர்வாகம் – உத்தரப்பிரதேசத்தில் நடந்த கொடூர சம்பவம்..!!
என்னை கோயிலுக்கு செல்ல விடாமல் தடுக்கும் சதி இது. பட்டியலினத்தவர் கூட கோயிலுக்கு செல்லக் கூடாது என நாளை தீண்டாமையை மீண்டும் கொண்டு வருவார்கள்
சந்திரபாபு நாயுடு ஆட்சியில்14 முறையும், கடந்த ஐந்து ஆண்டுகளில் 15 முறை நெய் தரம் இல்லை என டேங்கர்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இது வழக்கமாக தேவஸ்தானத்தில் உள்ள நடைமுறைதான். தற்பொழுது இதற்கு அரசியல் சாயம் பூசுகிறார்கள் என ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.