அமெரிக்காவில் பேரழிவை யார்படுத்தியுள்ள காட்டுத்தீயால் அப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா – லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீயால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், வணிக கட்டடங்கள் எரிந்து கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட இந்த காட்டுத்தீயால் 57 பில்லியன் டாலர் (ரூ.4.8 லட்சம் கோடி) வரையிலான சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
Also Read : திருப்பதியில் நடந்த துயர சம்பவம் – கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு..!!
முதன்முதலில் கடந்த ஜன.7-ம் தேதி பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் பரவத் தொடங்கிய காட்டுத் தீ வேகமாக பரவி கிட்டத்தட்ட 16,000 ஏக்கர்களை எரித்த பிறகு சுற்றுப்புற நகரங்களில் பரவியது.
கடற்கரை காற்றினால் வேகமாக பரவும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்க தீயணைப்பு வீரர்கள் தற்போது திணறி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.