மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக தேவேந்திர ஃபட்நாவிஸ் 3வது முறையாக பதவியேற்றுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக தேவேந்திர ஃபட்நாவிஸ் 3வது முறையாக தெரிவுசெய்யப்பட்ட நிலையில் இன்று மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது .
இந்த விழாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, பாலிவுட் பிரபலங்கள் ஷாருக் கான்,சல்மான் கான், சன்ஞய் தத், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
Also Read : ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவம் படிக்கத் தடை – கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வேதனை..!!
இதையடுத்து அனைவர் முன்னிலும் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக 3வது முறையாக தேவேந்திர ஃபட்நாவிஸ் பதவியேற்றார். அவரை தொடர்ந்து மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக, முன்னாள் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் பதவியேற்றுக்கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக தேவேந்திர ஃபட்நாவிஸ் மற்றும் துணை முதலைமைச்சர்களாக ஏக்நாத் ஷிண்டே , அஜித் பவார் ஆகியோர் பதவியேற்ற நிலையில் அவர்களுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.