விதார்த், பூர்ணா இணைந்து நடித்துள்ள ‘டெவில்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
வளர்ந்து வரும் நடிகர் விதார்த் மற்றும் நடிகை பூர்ணா ஆகியோர் நடிபில் உருவாக்கி உள்ள திரைப்படம் ‘டெவில்’. மாருதி பிலிம்ஸ் சார்பாக ஆர்.ராதா கிருஷ்ணன் எச்,ஹரி இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
இயக்குநர் ஆதித்யா இயக்கி உள்ள இந்த படத்தில், இயக்குநர் மிஸ்கின் முதல் முறையாக இசையமைப்பாளராக களமிறங்கியுள்ளார்.
இந்த படத்தில் நடிகர் விதார்த் மற்றும் நடிகை பூர்ணா ஆகியோருடன் இணைந்து இயக்குநர் மிஸ்கின், ஆதிக் அருண், சுபஸ்ரீ ராயகுரு ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் வெளியீட்டு பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியாகியுள்ளது.