தனுஷ் நடிக்கும் புதிய படத்தின்(Dhanush 51 ) படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது.
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 12 தேதி ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் வெளியானது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிபில் திரை அரங்குகளில் வெளியான இந்தப் படம் பீரியட் ஜானரில் உருவாகியுள்ளது.
https://x.com/ITamilTVNews/status/1747866068528579056?s=20
கேப்டன் மில்லர் இதுவரை மொத்தமாக 75 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தனுஷின் 51வது (Dhanush 51) படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது தேசிய விருது பெற்ற சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் தனது 51வது படத்தில் நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்று பூஜையுடன் தொடங்கியது. நாகர்ஜுனா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், இப்படத்தின் (Dhanush 51) படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. முதல்கட்டமாக படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இதில் தனுஷ், இயக்குநர் சேகர் கம்முலா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
ராஷ்மிகா ஆகியோர் விரைவில் படப்பிடிப்பில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது. தனுஷின் 50வது படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில் புதிய படத்தின் பணிகளில் தனுஷ் இரங்கி உள்ளார்.
தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்கிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ,துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெய்ராம், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
மேலும் எஸ். ஜே. சூர்யா, சந்தீப் கிஷான் இருவரும் தனுஷிற்கு அண்ணன், தம்பி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்ற தகவலும் வெளியானது.