Dhanush – Aishwarya Divorce Decision : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி அன்று ரஜினியின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை, இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும் இயக்குநர் செல்வராகவனின் தம்பியுமான நடிகர் தனுஷ், காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
18 ஆண்டுகள் தம்பதிகளாக இருந்த இவர்கள், 2022ம் ஆண்டு ஜனவரி 17ந் தேதி இன்ஸ்டாகிராமில் ஒரு அறிக்கை வெளியிட்டு விட்டு பிரிந்தனர்.
இதையும் படிங்க : யுகாதி பண்டிகை கொண்டாட்டம் : எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!!
திருமண வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்று பிரிய போவதாகவும், இருவரும் கோர்ட்டில் விவாகரத்திற்கு விண்ணப்பித்ததாகவும் ஒரு தகவல் வெளியானது.
அது வெறும் வதந்தி என சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பர விவாகரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
தொடர்ந்து, நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுக்கள் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது Dhanush – Aishwarya Divorce Decision.
இது தனுஷின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படிங்க : சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!!