“மீண்டும் தனுஷ் – நித்யா மேனன் காம்போ”..!! D 50 படத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!

நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை அவரே இயக்கி நடித்து வரும் நிலையில், படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனனை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷின் D 50 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.

தற்போது பிஸியாக இருக்கும் தனுஷின் லைன்-அப்பில் அடுத்தடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர், இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கும் Tere Ishk Mein ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.

D 50 படத்தில் எஸ்ஜே சூர்யா, விஷ்ணு விஷால், சுந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து அபிஸியல் அப்டேட் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

அதேபோல், இப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் பெஸ்ட்டியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்த நித்யா மேனன் தற்போது D 50 படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட சென்னையை பின்னணியாக வைத்து கேங்ஸ்டர் ஜானரில் உருவாகி வரும் D 50, ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. D 50 அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகலாம் எனக் கூறப்படும் நிலையில், அதற்கு முன்பாக வெளியாக உள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்திற்காக தனுஷ் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Total
0
Shares
Related Posts