சிங்கப்பூர் அதிபராக தர்மன் தேர்வு – அண்ணாமலை வாழ்த்து

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில், 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மனுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில், யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த திரு.தர்மன் அவர்கள் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். உலக அரங்கில், தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் கிடைத்துள்ள மற்றொரு பெருமையான நிகழ்வாகும்.

கடந்த 2001 ஆம் ஆண்டு, சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியிலிருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு, சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துப் பெருமை சேர்த்தவர்.

திரு. தர்மன் அவர்கள் தலைமையிலான அரசு, தொடர்ந்து, உலக அரங்கில் சிங்கப்பூரின் பெருமையை நிலைநிறுத்துவதாகவும், இந்தியாவுக்கும், தமிழ் மக்களுக்கும், சிங்கப்பூருக்குமான நெருக்கமான உறவை மேன்மைப்படுத்துவதாகவும் அமையும் என்பதில் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது என அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total
0
Shares
Related Posts