சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் தேர்வு – பிரதமர் மோடி வாழ்த்து!!

சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த அதிபர் தேர்தலில் 70.4 % வாக்குகளைப்பெற்று தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றதாக தேர்தல் துறை அறிவித்துள்ளது.

இதையடுத்து சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னத்துக்கு அந்நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

“சிங்கப்பூர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியா-சிங்கப்பூர் இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற நான் ஆர்வமாக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும், சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மனுக்கு வாழ்த்துகள். உங்களுடைய தமிழ் பாரம்பரியமும், ஈர்க்கக்கூடிய தகுதிகளும் எங்களை பெருமையடைய செய்திருக்கிறது.

உங்களது வெற்றி சிங்கப்பூர் மக்களின் பன்முகத்தன்மையை காட்டுகிறது. உங்களது ஆட்சிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

Total
0
Shares
Related Posts