கேரளாவில் வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு – கேரள டிஜிபி அதிர்ச்சி தகவல்…!!

கேரள மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு என கேரள மாநில போலீசார் உறுதி செய்துள்ளனர்.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே களமசேரி பகுதியில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டத்தில் இன்று குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது .

சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பயங்கர சத்தத்துடன் 3 குண்டுகள் வெடித்துள்ளது . இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 5 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமணியில் அனுமதிக்கப்பட்டுள்ளதகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்த கேரள டிஜிபி கூறியதாவது :

எர்ணாகுளம் அருகே களமசேரி பகுதியில் உள்ள கிறிஸ்தவ கூட்ட அரங்கில், வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு என உறுதி செய்யபட்டுள்ளது. தொடர்ச்சியாக 3 குண்டுகள் வெடித்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ, தேசிய பாதுகாப்பு படை மற்றும் கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக கேரள டிஜிபி தெரிவித்துள்ளார்.

Total
0
Shares
Related Posts