ஜீவாவின் அகத்தியா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் திரை விமர்சனம் குறிப்பிடு விவாதிக்கலாம் வாங்க.
அகத்தியா திரைப்படத்தில் சினிமா கலை இயக்குநரான வரும் ஜீவா ஒரு படத்துக்காக, தனது சொந்தக் காசை போட்டு புதுச்சேரியில் உள்ள ஒரு பழங்கால பங்களாவைப் பேய் வீடாக மாற்றியமைக்கிறார் . பல கோடி செலவு செய்து அனைத்தையும் கட்டமைத்த போது படம் திடீரென நின்று விடுகிறது இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் ஜீவா அவரது தோழி வீணா (ராஷி கன்னா) ஒரு ஐடியா கொடுக்கிறார்.
வெளிநாட்டில் இருக்கும் ‘ஸ்கேரி ஹவுஸ்’ போன்று இங்கு நாம் ஏன் உருவாக்கக் கூடாது? அதன் மூலம் கட்டணம் வசூலித்துப் போட்ட காசை எடுக்கலாம் என்கிறார். கதாநாயகியின் ஐடியாவை விரும்பிய ஜீவா அதனை அப்படியே செய்கிறார் . ஆனால், அந்த வீட்டில் உண்மையிலேயே சில ரகசியங்களும் பேயும் இருப்பது தெரிய வருகிறது. இதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை .
Also Read : புஷ்கர், காயத்ரியின் சுழல் 2 எப்படி இருக்கு – திரைப்பார்வை..!!
ஹாரர் த்ரில்லர் படமான இதில் பழிவாங்குதல், அம்மா சென்டிமென்ட், என பல விஷயங்களைக் கலந்து சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக பரிமாறப்பட்டுள்ளது .
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை நினைத்ததை திறம்பட செய்திருக்கிறார் இயக்குநர் பா.விஜய், அதில் வெற்றியம் கண்டுள்ளார். ஆக மொத்தம் பல வித்தியாச தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு திரையரங்குகளில் வித்தியாசமான அனுபவத்தைத் தரும் ‘அகத்தியா’நிச்சயம் பார்க்கவேண்டிய படம்.
சமீபகாலமாக வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்யும் நடிகர் ஜீவாவுக்கு இந்த ‘அகத்தியா’வும் பலமான நம்பிக்கை கொடுத்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.