ITamilTv

இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்..!

Spread the love

இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இன்று காலை உயிரிழந்துள்ளார் .

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் மாரிமுத்து . தேனி மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட இவர் பல சூப்பர் ஹிட் படங்ககளில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் .

திரையுலகில் பெயரையும் புகழையும் பெற்ற இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ என்ற சூப்பர் ஹிட் தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் தீடிர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மாரிமுத்து இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சின்னத்திரையில் ஆதி குணசேகரனாக மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த மாரிமுத்துவின் இறப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது . இதையடுத்து மாரிமுத்துவின் குடும்பத்திற்கு திரையுலகினர் பலரும் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.


Spread the love
Exit mobile version