மலையாள திரை உலகின் முக்கிய இக்குநர்களில் ஒருவரான கே.எஸ்.சேதுமாதவன் காலமானார்.

director-ks-sethumadhavan-passes-away
director-ks-sethumadhavan-passes-away

இந்திய சினிமாவின் பழம்பெரும் திரைப்பட இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் காலமானார். அவருக்கு வயது 90.

பாலக்காட்டைச் சேர்ந்த சுப்பிரமணியம் மற்றும் லட்சுமி தம்பதியருக்கு 1931ஆம் ஆண்டு மகனாக பிறந்தார் சேதுமாதவன். தமிழ்நாட்டின் வட ஆற்காடு மற்றும் பாலக்காட்டில் குழந்தைப் பருவத்தை தொடர்ந்து பாலக்காட்டில் உள்ள விக்டோரியா கல்லூரியில் தாவரவியலில் பட்டம் பெற்றார்.

1951 ஆம் ஆண்டு சேலம் திரையரங்கின் மர்மயோகி திரைப்படத்தில் ராமநாதனின் உதவியாளராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய சேதுமாதவன், 1961 இல் வீரவிஜயம் என்ற சிங்களத் திரைப்படத்தின் மூலம் இயக்குநரானார்.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசனை அறிமுகப்படுத்தியது மட்டும் இல்லமால் தமிழில் கமல் நடித்த நம்மவர் படத்தையும் இயக்கியுள்ளார். மலையாள திரையுலகில் முக்கிய இக்குநர்களில் ஒருவராகவும் அறியப்பட்டார்.
இவர் மலையாளம், தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம் உட்பட்ட பிற மொழித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். பல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ள இவரது முதல் படம் 1961ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஞானசுந்தரி. இவருடைய திரைப்படங்கள் பல தேசிய மற்றும் மாநில திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளது.

director-ks-sethumadhavan-passes-away
director ks sethumadhavan passes away

இவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் சென்னை கோடம்பாக்கம் டைரக்டர்ஸ் காலனியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவரது மறைவுக்கு கமஹாசன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Total
0
Shares
Related Posts