100 ஏக்கர் பரப்பரப்பில் தமிழ்நாடு சுற்றுலா துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் தீம் பார்க் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.26) தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் சுற்றுலாவுக்கு ஒரு புதிய பரிணாமத்தை அளித்து நாட்டின் முன்னோடி சுற்றுலா தலமாக மாற்றித் துறையினை புதிய உயரத்துக்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட “தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023”-ஐ வெளியிட்டார்.

இந்தியாவில் சிறப்பான சுற்றுலாத் தலங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் முக்கிய இடத்தில் உள்ளது. தமிழகத்தில் பல்வகையான சுற்றுலா தலங்கள், பிரம்மாண்டமான திருக்கோயில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலை மற்றும் வனப்பகுதிகள், அழகிய கடற்கரைகள் போன்ற பல்வேறு சுற்றுலா தலங்கள் பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இத்தகைய பெரும் வாய்ப்புகள் அடங்கிய சுற்றுலாத்துறையை மேம்படுத்திட தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தின் குறிப்பிடத்தக்க இயக்கியாக சுற்றுலாத்துறை திகழ்கிறது. திறமையான தொழில் வல்லுநர்கள், உள்ளூர் கைவினைஞர்கள், வழிகாட்டிகள், சிறிய அளவிலான தொழில்முனைவோர் என பரந்த அளவிலான திறன்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறனை சுற்றுலாத்துறை கொண்டுள்ளது.

அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள டிஸ்னி தீம் பார்க் போன்ற சர்வதேச அளவில் சென்னை புறநகர் பகுதியில் 100 ஏக்கர் பரப்பரப்பில் தமிழ்நாடு சுற்றுலா துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் தீம் பார்க் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தீம் பார்க் என்பது பெரிய பொழுதுபோக்கு மையமாகும். இதில் அட்வென்சர் ரைடிங், குழந்தைகளுக்கு விளையாட்டுகள், குழந்தைகள் விளையாட பொழுதுபோக்குப் பூங்காக்கள்,செய்கை நீர்வீழ்ச்சி, சர்வதேச அளவில் கண்காட்சிகள் விளையாட்டு அரங்குகள் என தீம் பர்கில் அமைக்கப்பட உள்ளது